பிரதான செய்திகள் விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் – யாழ்ப்பாணம் அணி வெற்றி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிக்கும் காலி க்ளேடியேடர்ஸ் அணிகளுக்குமிடையில் நேற்றையதினம் அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 176 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியீட்டியுள்ளது. #லங்காபிரீமியர்லீக் #யாழ்ப்பாணம்ஸ்ராலியன்ஸ் #வெற்றி #LPL

Spread the love
Tags

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap