Home இலங்கைநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.

நள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.

by admin

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கொள்ளையிட்டமை தொடர்பிலும் தகவல்கள் இல்லை என தெரிவித்த ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#வாள்வெட்டு #தாக்குதல் #சங்கானை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More