Home இந்தியாபேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

by admin

இந்திய முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ள நிலையில் அவா் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் அண்மையில் பரோலில் வந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார்.

தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், கடந்த இரு தினங்களுக்கு முன் பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்திருந்தது.

அத்துடன், பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சிறுநீரகத் தொற்று மற்றும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கான சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. #பேரறிவாளன் #மருத்துவமனை #ராஜீவ்காந்தி #பரோல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More