Home இலங்கைஉயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா தொற்று இல்லை

உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா தொற்று இல்லை

by admin

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த அருளையா ஜனகராசா (வயது- 60) என்பரே உயிரிழந்தார்.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கொவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு 20 சதவீதமாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என்றுள்ளது.

இந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. #உயிரிழந்த #காரைநகர் #கொரோனா #சத்தியமூர்த்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More