இலங்கை பிரதான செய்திகள்

யாழ் – கிளி மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் – வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதனால் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமை போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தநிலையில் கடந்த வாரம் புரவி புயல் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில், மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் கனத்த மழை தொடா்ந்து பெய்துவருவதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

கனகாம்பிகை குளத்திலிருந்து அதிக நீர் வெளியாகின்றதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, உரையால் புரம் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #யாழ் #வெள்ளத்தில் #மழைவீழ்ச்சி #புரவிபுயல்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link