Home இலங்கையோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு !

யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு !

by admin

ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன்,  ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாதன் சுவாமி ஆகியோர்  இறுவட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.


மு.சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும்,  இ.தனஞ்சயனின் எழுத்து மற்றும் இயக்கத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. #யோகர்சுவாமிகள் #ஆவணப்படம் #ஈழத்துச்சித்தர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More