கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சுனாமியில் காணாமல் போன மகனுக்கு இரு தாயார் உரிமை கோரல் தொடர்பான வழக்கு இன்று (8) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது மகனுக்காக ஏங்கும் இரு தாய்மார்களும் மன்றிற்கு வருகை தந்ததுடன் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.
இருந்த போதிலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மரபணுபரிசோதனை தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி வழக்கை ஒத்திவைத்தார்.
இன்றைய வழக்கு விசாரணைக்காக கடந்த தவணையில் மன்றிற்கு வருகை தராத ஒரு தரப்பினர் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்மாந்துறை பொலிஸார் வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு விசாரணையை நீதிவான் மேற்கொண்டிருந்ததுடன் சிறுவனின் வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா ஆகியோர் வருகை தந்திருந்தனர். #கொரோனா #அச்சுறுத்தல் #மரபணுபரிசோதனை #சுனாமி #காணாமல் போன