Home சினிமாசின்னத்திரை நடிகை சித்ரா (முல்லை) தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா (முல்லை) தற்கொலை

by admin

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்ற சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.


சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டனா்.


இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் எனவும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தொிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொிவித்துள்ளாா்.

இதேவேளை நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமான 28 வயதான நடிகை சித்ரா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார்.

சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு திருமணம் நிச்சயம் ஆகயிருந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது #சின்னத்திரை #நடிகை #சித்ரா #தற்கொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More