இலங்கை பிரதான செய்திகள்

கிணறுகளுக்கு குளோரின் இடும் பணிகள் ஆரம்பம்

 

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை குளோரின் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


கடந்த வாரம் யாழில் நிலவிய சீரற்ற காலநிலையால் , கடுமையான மழை பெய்திருந்தது. அதனால் பல கிணறுகளில் வெள்ள நீர் உட்புகுந்திருந்தது. அதனால் நீர் மாசடைந்து காணப்பட்டமையால் , சுட்டாறிய நீரினை பருகுமாறும் , கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் சுகாதார அதிகாரிகள் கோரியிருந்தனர். 


இந்நிலையில் , பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் கிணறுகளுக்கு குளோரின் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
இது வரையில் 5 பொதுக்கிணறுகள் உட்பட 45 கிணறுகளுக்கு  குளோரின் இடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கிணறுகளுக்கு குளோரின் இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. #கிணறுகள் #குளோரின் #ஆரம்பம் #பருத்தித்துறை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.