Home இலங்கைவாள்வெட்டு சந்தேகநபர் கைது

வாள்வெட்டு சந்தேகநபர் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புக் காவல்துறைப்பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செப்ரெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்தமை, நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீடு புகுந்து இளைஞனையும், தாயாரையும் தாக்கியமை , கச்சேரியில் ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபராக சுமன் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.


யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறைபட பிரிவினரால் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓமந்தையில் தலைமறைவாகி யிருந்தமை தொலைபேசி  உரையாடலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்  

பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளின் தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்தனர். #வாள்வெட்டு #சந்தேகநபர் #கைது #யாழ்ப்பாணம் #சுமன் #தனுரொக்

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran December 15, 2020 - 7:45 pm

பொதுவாக:

1. யார் வெட்டுகிறார்கள்?
2. யாரை வெட்டுகிறார்கள்?
3. பாதிக்கப்பட்டவர்கள் யார்?

4. வெட்ட துணிவு வந்தது எப்படி?
5. வெட்ட ஊக்குவிப்பவர்கள் யார்?
6. யார் வெட்ட ஒழுங்கமைக்கிறார்கள்?

7. வெட்டியவர்கள் எப்படி தப்புகின்றார்கள்?
8. கைப்பற்றப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?

9. வாள் வெட்டுகள் ஏன் இன்று வரை தடுக்கப்படவில்லை?
10. வாள் வெட்டு ஏன் தொடர்கிறது? விசாரணைகளுக்கு என்ன நடந்தது?
11. வெட்டு எப்போது தொடங்கியது? எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்?

12. வடக்கு மற்றும் கிழக்கு தவிர வேறு பகுதிகளிலும் இதேபோன்ற வன்முறை உள்ளதா?

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More