Home இலங்கைதப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது

by admin

வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இவரைக் கண்டுபிடிப்பதற்காக  காவல்துறை ஊடகப் பிரிவு இவரது புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், மருதானை பிரதேசத்தில் வைத்து அவா் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளாா்


December 16, 2020 6:04 am

வெலிசர சுவாச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனைங் காணப்பட்டிருந்த நிலையில் அவா் தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #கொரோனா #தொற்றாளர் #தப்பி #வெலிசர

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More