157
மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், காவற்துறைனர் நேற்று (18.12.20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்தக் காலத்தில் அந்தக் கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே காவற்துறைனர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் காவற்துறைனரால் மீட்கப்படவில்லை.
Spread the love