இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகின்ற நிலையில்
நேற்று நடந்த மீட்பு பணியின்போது விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா? என்பது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். எனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளதாகவும் விமனத்தில் பயணித்த பயணிகளில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தினை காணவில்லை
PublicPublish January 9, 2021 10:38 am
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான SJY 182 எனப்படும் போயிங் 737 ரக விமானம் , புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகவும் விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #இந்தோனேசியா #ஜகார்த்தா #விமானத்தினை #காணவில்லை #போயிங்737