Home இலங்கைரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

by admin

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை இன்றயைதினம் மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்  பிறப்பித்துள்ளது.

அவர், எந்தவொரு சிறைச்சாலைக்கும் அழைத்துச் செல்லப்படமாட்டார் எனவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டத்தின் பிரகாரம், அவரை பல்லன்சேன தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. #ரஞ்சன்ராமநாயக்க #கடூழிய_சிறைத்தண்டனை #நீதிமன்ற_அவமதிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More