Home இலங்கைஇலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளன

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளன

by admin

இலங்கையில் தற்போது மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அங்கு சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாக மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று (13) வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது

மேலும் சிறுபான்மை சமூகத்தினரே கொரோனாவை திட்டமிட்டு பரப்பி வரும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன், பொறுப்புக்கூறல், சாட்சிகளை பாதுகாத்தல் தொடர்பில் பிரேரணையொன்றை கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். #மனிதஉரிமை #மோசமடைந்துள்ள #மீனாக்ஷி_கங்குலி #மனிதஉரிமைகண்காணிப்பகம் #HRW #சிறுபான்மை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More