Home இலங்கை25 வருடங்களின் பின் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை TNA இழந்தது…

25 வருடங்களின் பின் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை TNA இழந்தது…

by admin

திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இந்த பிரதேச சபையின் அதிகாரம் இருந்தது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் (16.01.21) புதிய தவிசாளர்களுக்கான தெரிவு, உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் 22 உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர். இவர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தங்கராசாவும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ரத்நாயக்கவும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டனர்.

இவர்களுக்கிடையிலான வாக்கெடுப்பின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களினதும் சுயேச்சைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களதும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரினதும் ஆதரவை பெற்று பத்து வாக்குகளை தங்கராசா பெற்று இருந்தார்.

இலங்கை பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, எஸ்.டி.பி.டி, இலங்கை சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆதரவை பெற்று எதிரணியின் ரத்நாயக்க 12 வாக்குகளை பெற்றார்.

வாக்கெடுப்பின் இறுதியில் ரத்னாயக்க, 2 பெரும்பான்மை வாக்குகளால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More