
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரி அருகே ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு ஹனசுடு என்ற கிராமத்தின் வழியாக டைனமைட் வெடிபொருளை கல்குவாரிக்கு ஏற்றிச் சென்ற வாகனம் பயங்கர சத்தத்துடன் வாகனம் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகல்கள் வெளியாகியிருந்த நிலையில் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்து தற்போது 15 போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
. உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #கல்குவாரி #வெடிப்பு #டைனமைட் #ஷிமோகா
Spread the love
Add Comment