Home இலங்கைவீடுடைந்து கொள்ளையடித்த 03 சந்தேக நபர்கள் கைது

வீடுடைந்து கொள்ளையடித்த 03 சந்தேக நபர்கள் கைது

by admin

வீடுடைந்து தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை   சம்மாந்துறை காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(29.01.2021) அன்று   நள்ளிரவு வேளை  அம்பாறை  சம்மாந்துறை மலையடி கிராம  பிரதேசத்தில் வீடுடைத்து தங்கநகைகள் களவாடப்பட்டுள்ளதாக காவல்துறை அவசர பிரிவான 119 இலக்கத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய    சம்மாந்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுடன்   சம்மாந்துறை காவல்நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில்  சென்ற  குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் அடிப்படையில் அதே பிரதேசத்தை சேர்ந்த  19 வயது மதிக்கத்தக்க  மூன்று சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டனர்.

இதன் போது கைதானவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 5 அரை பவுண் தங்க நகைகள் 19,500 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

  அத்துடன் கைதான  மூவரும் இன்றைய தினம்(30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினா் மேற்கொண்டுள்ளனர். #வீடுடைந்து #கொள்ளையடித்த #சந்தேகநபர்கள் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More