Home இலங்கைவடக்கில் 80 சதவீதமான சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசி பெற்றனர்

வடக்கில் 80 சதவீதமான சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசி பெற்றனர்

by admin

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் நேற்றைய நான்காம் நாளில் 704 பேர் டோஸ் பெற்றுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 80 சதவீதமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதுதொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.
இந்தப் பணியில் முதல் நாளில் 2 ஆயிரத்து 997 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.


மூன்றாம் நாளான திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 694 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.
நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை  704 பேர் கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 299 பேரும் கிளிநொச்சியில் 110 பேரும் மன்னாரில் 40 பேரும் வவுனியாவில் 240 பேரும் முல்லைத்தீவில் 15 பேரும் இன்று கொவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.
அதன் மூலம் இதுவரை 80 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.


பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனால் அவ்வாறானவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் என தெரிவித்தார்.  #வடக்கில் #சுகாதாரத்துறையினர் #கொவிட்19 #தடுப்பூசி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More