Home இலங்கையாழில் சுதந்திரக் கட்சியின் ஊர்வலத்திற்கு தடை இல்லை :

யாழில் சுதந்திரக் கட்சியின் ஊர்வலத்திற்கு தடை இல்லை :

by admin

யாழ்ப்பாணத்தில் இன்று (04),ஒரே நாடு ஒரே இனம் என கோசம் எழுப்பியவாறு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவா்களால் சுதந்திர தின பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

பேரணியின் நிறைவில் கலந்து கொண்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர யாழ்ப்பாணப் பொது நூலக முகப்பில் விளக்கேற்றி வைத்துள்ளாா்.

யாழ் – பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, கோட்டையை சுற்றி ஏ-9 விதிச் சந்தி ஊடாக, கேகேஎஸ் வீதியால் சென்று வைத்தியசாலை வீதியால் பயணித்து மகாத்மா காந்தி வீதியுடாக யாழ் பொது நூலகத்தை சென்றடைந்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை, வடக்கு , கிழக்கில் கரிநாளாகப் பிரகடனத்தி, தமிழ் மக்கள் பல்வேறு வாழ்வுரிமை – நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் நடாத்தப்பட்ட இந்தப் பேரணிக்கு காவல்துறையினா் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை.

தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு, கொவிட் -19 தொற்றுநோயைக் காரணம் காட்டி, நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று தடுக்க முற்பட்ட காவல்துறையினா் இந்தப் பேரணிக்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #யாழில் #ஶ்ரீலங்காசுதந்திரக்கட்சி #தடை #தயாசிறி #கொவிட்19

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More