Home இலங்கைரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு

by admin

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 4 வ வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்போதுள்ள நிலைமையையே தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு முன்னர் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ரத்து செய்வதனை தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கா சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மனுதாரரின் சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர முஸ்தப்பா சுகயீனமுற்று இருப்பதினால் வேறொரு தினத்தை வழங்குமாறு கோரியிருந்தாா்.

இதனையடுத்து மனு தொடர்பில் மேலதிக விடயங்களை மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஆராய நீதியரசர் குழாம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை குற்றச்சாட்டு ஒன்று தொடா்பாக மரண தண்டனை விதிக்கப்படடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64 (ஊ) சரத்திற்கு அமைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்வதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதனை ரஞ்சன் ராமநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது #ரஞ்சன்_ராமநாயக்க #இடைக்காலதடை #சிறைத்தண்டனை #நாடாளுமன்றஉறுப்பினர் #ரீட்மனு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More