Home இலங்கை “உலகிற்கு அறிவியல் தேவை. அறிவியலுக்கு பெண்கள் தேவை” ஐ.நா!

“உலகிற்கு அறிவியல் தேவை. அறிவியலுக்கு பெண்கள் தேவை” ஐ.நா!

by admin

கொரோனா தொற்று நோயிலிருந்து உலகைக் காப்பாற்றும் பணியில் முன்னோடியாக விளங்கிய அறிவியல் துறையில் பெண்களை வேலைகளில் இருந்து விலக்குவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இன்று விஞ்ஞானத்தில் பெண்கள் மற்றும் பெண்கள் (சிறுமிகள்) சர்வதேச தினத்தை குறிக்கிறது: “உலகிற்கு அறிவியல் தேவை. அறிவியலுக்கு பெண்கள் தேவை ” ஐக்கிய நாடுகள் மகளிர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரம்பரிய சமூக நெறிகள் ஊடாக பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்கள் நிபுணர்களாக மாறுவதைத் தடுக்கிறார்கள்.

அறிக்கை பின்வருமாறு:

உலகிற்குஅறிவியல் அவசியம். அறிவியலுக்குபெண்கள் அவசியம
அறிவியல் மற்றும் தொழிநுட்பமுன்னேற்றத்திலேயேஎதிர்காலம் தங்கியுள்ளதுஎன்பதற்குதற்போதுநீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும். அறிவியல்,தொழிநுட்பம் மற்றும் கண்டு பிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவராகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடையமுடியும்.


எதிர்வினைமற்றும் மீட்சியை நோக்கிய எமதுபயணத்தில், கொவிட்-19 தடுப்பூசிகளை முன்னோடியாகக் கொண்டவர்களில் இலங்கை பெண் ஆராய்ச்சியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

தொற்றுநோய்க்குமுன்னரேஅறிவியலில் பெண்கள் முக்கியபங்குவகித்தனர். 2017ஆம் ஆண்டில்கூட அறிவியல், தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் ஆகிய துறைகளில் பட்டதாரிகளுக்கான சேர்க்கையில் ஏறத்தாழ அரைவாசிப்பேர் பெண்களாவர்.


எனினும்,பால்நிலைதொடர்பானநிலைப்பாடுஉள்ளிட்டசமூக-கலாச்சாரவிதிமுறைகள் பெண்களை அறிவியல், தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் துறைகளில் கற்பதை தடுக்கின்றன. அறிவியலில் பால் நிலை சமத்துவத்தை அடைவதற்கு, முதலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் எந்தவொரு தொழிலையும் செய்யமுடியும் என என்பதுபதை அங்கீகரிக்கப்பட வேண்டும்.


அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கான இந்தசர்வதேசதினத்தில் குறுகிய சிந்தனை மனப்பான்மையை தகர்த்தெறிந்து, மனநிலையை மாற்றி, பாகுபாடுமற்றும் சமத்துவமின்மையை தோற்கடிப்போம். நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய கடமையுண்டு. அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளைஅதிகளவில் ஈடுபடுத்துவோம்.


ஐ.நா. பெண்கள்அமைப்பு -ஐ.நா. பெண்கள் அமைப்பு என்பது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நாஅமைப்பு ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உலகளாவிய வெற்றிகரமான அமைப்பான ஐ.நா. பெண்கள் அமைப்பு உலகளவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில்முன்னேற்றத்தைதுரிதப்படுத்தநிறுவப்பட்டது. மேலும்அறிக: asiapacific.unwomen.org

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More