அறிமுகம் இறைவனோடு ஒன்றறக் கலக்க வைக்கும் அற்புத சக்தி இசைக்கு உண்டு. இதை நாயன்மார்கள், ஆழ்வார்கள், இசையாளர்கள் போன்றோர் இன்று வரை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் முறையாக இசையைக் கற்காதவராக இருந்தாலும் சரி, கற்றவராக இருந்தாலும் சரி இறைவன் அளித்த இசை ஞானத்தைச் சிறந்த முறையில் சீர் செய்து இறைபுகழ் பாடுவது மனதிற்கு வலிமை பெற்றுத் தந்து விடும் என்பது உண்மை. நாயன்மார்கள், ஆழ்வார்கள், அன்று முதல் அன்று வரையான இசை ஆர்வலர்கள் அனைவரும் இசையை மூச்சாகக் கொண்டு இறைபணி ஆற்றியவர்களே.
அந்த வகையில் கணபதிப்பிள்ளை சுந்தரநாதன் அவர்களும் சமயம், சமூகம் சார் செயற்பாடுகள் மூலம் மக்களின் மத்தியில் பிரபல்யம் பெற்ற ஒருவராவார். வாழ்வில் கலைப்பணி, சமயப்பணி, சமூகப்பணி என்பவற்றை மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்படன் வாழ்ந்து மறைந்த மாமனிதர். அவரது வாழ்வின் சுவாரஸ்யங்களையும், வாழ்வில் கடந்து வந்த பாதையினையம், சமய, சமூகப் பணிகளையும் இந்த ஆய்வின் மூலம் கொண்டு வருகின்றேன்.
பிறப்பு இவர் 1934ம் ஆண்டு மார்கழி மாதம் 16ம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்லடித்தெருப் பகுதியில் கணபதிப்பிள்ளை – அன்னம் தம்பதியினருக்கு 4வது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட நாமமே ‘சுந்தரநாதன்’. பெயருக்கு ஏற்றாற் போல அழகிய முகமும், மனமும் இவரிடம் மிளிர்ந்தது. அனைவரையும் தனது அன்பால் கட்டிப்போடும் நட்புறவு கொண்டவர். அவரது அழகிய மனம், எண்ணம் என்பவற்றைப் போற்றிப் புகழாத நாவே இல்லை எனலாம். எவாராகினும் வீட்டிற்கு வந்திருந்தால் சாப்பிடும் உணவைப் பிசைந்து, தனது கையாலேயே அவர்களுக்கு ஊட்டி மகிழ்ச்சி காண்பவர்.
இதனால் தானோ அவரை ஊர்மக்கள் அனைவரும் ‘சுந்தரம் அண்ணே’ என்று சொந்தம் கொண்டாடுவர். மட்டக்களப்பு மாநகர சபையில் தொழில் புரிந்தவர். சிறப்பாக புத்தகம் கட்டுவது இவரது பணியாகும். ஆயினும் பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், கூத்துக்கலைஞர், மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக் கழக உதைப்பந்து பயிற்றுவிப்பாளர் என பல ஆற்றுகைகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்கியவரர். இவரத குரல்வளம் மிக மிக இனிமையானது. காளி அம்மனுக்காக பல பாடல்களை இயற்றிய பெரும் பேறு பெற்றவர். முறைப்படி இசையினைக் கற்காதவராக வாழ்ந்தாலம் இசையினை அவரில் அருவியாயக் காணலாம. கண்டிருக்கிறறேன்.
சமயப்பணிகள் மட்டக்களப்பு பெரிய ஊறணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய முன்னாள் நிர்வாகசபைத் தலைவராகப் பதினான்கு ஆண்டுகள் இறை பணியாற்றியவர். ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு பண்ணிசை பாடி வந்தார். மட்டக்களப்பு பெரிய ஊறணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கீழ் இந்து இளைஞர் மன்றம் எனும் அமைப்பை உருவாக்கி, அதனூடாக அறநெறிப்பாடசாலை அமைத்து சைவ மாணவர்களுக்கான முன்னாள் நிர்வாகசபைத் தலைவராகப் பதினான்கு ஆண்டுகள் இறை பணியாற்றியவர். எனது சிறிய வயது முதல் பல அறநெறிப்பாடசாலை வகுப்புகளுக்கு தேவார வகுப்பிற்காக அவருடன் செல்வேன்.
அப்போது அங்கு வரும் மாணவர்களுக்கு அமைதியாகவும், இராகத்துடனும் தேவாரங்கள், திருவாசகங்கள், திருவிசைப்பாக்கள், திருப்பல்லாண்டுகள், திருப்புராணங்கள் என்பவற்றைப் பக்தியுடனும், பண்ணுடனும் சொல்லிக் கொடுப்பார். அப்போது நான் அறிந்திருக்கவில்லை அவர் சொல்லிக்கொடுத்த பண்களையும், இராகங்களையும். ஆனால் அன்று அவருடன் சென்று தேவாரங்களைக் கற்றதும், அவர் எனக்குக் கற்பித்த முறைகளும் தான் இன்று ஒரு வாய்ப்பாட்டுப் கலைஞனாக சேவையாற்ற அழைத்திருக்கிறது. இது அவர் எனக்களித்த ஆசீர்வாதங்கள்.
பின்னர் 01. ஆலயங்களில் சரியைத் தொண்டினையும்,
02. இல்லங்கள் தோறும் பஜனை வழிபாட்டினையும்,
03. ஆலயங்களில் பஜனை நிகழ்வுகளையும் ஆரம்பித்தார்.
மிகவும் சிறப்பான முறையில் பிரபல்யமடைந்தது இவரது பணிகள். 1990ம் ஆண்டளவில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் தமிழ் மக்கள் பட்ட வேதனைகளைக் கண்டு மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் மீது ‘மாமாங்கப் பிள்ளையாரே – எங்கள் மாணிக்கப் பிள்ளையாரே மக்கள் படுந் துன்பங்கள் தெரியவில்லையா தமிழர் சிந்தும் கண்ணீரைக் காணவில்லையா…’ என்று மக்களின் துயர் போக்கும் பாடலை இயற்றி ஆலயங்கள் தோறும் பாடி வந்தார். சமூகப்பணிகள் பெரியஊறணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கீழ் 1989ம் ஆண்டளவில் பெரிய ஊறணி இந்து இளைஞர் மன்றத்தினையும், அதன் பெயரிலேயே அறநெறிப்பாடசாலையை உருவாக்கி ஊரிலுள்ள சிறுவர்கள், இளைஞர், யுவதிகளை இணைத்து அறநெறிப்பாடசாலையினையும், இந்து இளைஞர் மன்றத்தினையும் தனத கண்களாக பராமரித்து வந்தார். அவர் ஆரம்பித்த அறநெறிப்பாடசாலையானது இந்து சமய கராசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது. உசாத்துணைகள் 01. சுந்தரச்சுடர் – அன்னாரது 31ம் நாள் நினைவஞ்சலி இதழ் 02. நேர் காணல்கள்
‘இளங்கலைமணி’ சுரேந்திரா – நரேந்திரா
போதனாசிரியர் (வாய்ப்பாட்டு)
நடன, நாடகத்துறை,
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
மின்னஞ்சல்: [email protected]
Contact No: 0094764624990 / 0094754340220