இலங்கை பிரதான செய்திகள்

கடற்படையினாின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு

காரைநகர் நீலங்காடு பகுதியில் இன்றையதினம் கடற்படையினாின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தி குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்

குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளையே கடற்படையினாின் தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #கடற்படையினாின் #காணிகளை #சுவீகரிக்க #முறியடிப்பு #காரைநகர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link