Home இலங்கை தமிழ்த்தேசிய விடுதலைக்கான, அகிம்சைப் போராட்டங்களில் கரகாட்ட கலையை பயன்படுத்திய கலைஞன்!தே.பேபிசாளினி.

தமிழ்த்தேசிய விடுதலைக்கான, அகிம்சைப் போராட்டங்களில் கரகாட்ட கலையை பயன்படுத்திய கலைஞன்!தே.பேபிசாளினி.

by admin


ஈழத்தில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப்பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் மாலையர்கட்டு சோமசுந்தரத்தினை பற்றி எத்தனை பேருக்குத்தெரியும்?

கலையம்சம் என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாட்டினைக் குறிப்பிடுகின்றது. அவ்வகையில் சோமசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு மண்ணின் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கரகாட்டக் கலையினை வளர்த்தெடுத்த கலைஞராகத்திகழ்ந்தவர். இக்கலைஞர் பற்றி அறிந்தவர்கள் யார்உளர்?


துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் மாலையர் கட்டை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம், கந்தையா- கண்ணகை அவர்களுக்கு 1941ஆம்ஆண்டுதைமாதம் 7 ஆம் திகதி மகனாகப் பிறந்தவர்.

பெற்றோர்களின் அரவணைப்பில் வீட்டு வறுமைக்கு மத்தியில் வளர்ந்த இவர் தன்னுடைய பாடசாலைக் கல்வியினை முழுமையாக முடிக்காது தனக்கென தனியிடத்தினைத் தேடிக் கொள்ளும் முகமாக பதினெட்டாவது வயதில் தலையில் கரகத்தினை ஏந்தினார்.

இளவயதில் தமிழ்ப்பற்றுக்கொண்ட இவர் தமிழ்த்தேசிய விடுதலைக்கான பல அகிம்சைவழிப் போராட்டங்கள், ஊர்வலங்கள் பாதயாத்திரைகளிலும் தனது கரகாட்ட நிகழ்வினை நடத்தியுள்ளார். இதனடிப்படையில் இவர் கரகாட்டத்துறையில் தனக்கென தனியிடம்பிடித்து இலங்கையில் பிரசித்திபெற்ற ஆலயங்கள் மற்றும் விசேடநிகழ்வுகளில் கரகாட்டம் நிகழ்த்தி தனது கலையினை வளர்த்து வந்துள்ளார்.


குறிப்பாகபாண்டிருப்புதிளெபதியம்மன்ஆலயவளாகத்திலிருந்துஆறுமைல்தூரத்திற்குகற்பூரகரகாட்டம்ஆடிச்சென்றுஅனைவரையும்வியப்பில்ஆழ்த்தியுள்ளஇவர்தனதுகரகாட்டக்கலையைபின்வரும்ஆலயங்களில்சிறப்பாகஅளிக்கைசெய்துஅனைவரினதுபாராட்டையும்பெற்றுள்ளார்.

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம், திருக்கேதிச்சரம், திருகோணமலை பத்திரகாளியம்மன் ஆலயம், தெல்லிப்பளை கருமாரியம்மன் ஆலயம், திருகோணமலை சிவன்கோவில், மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயம், புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயம், கதிர்காமம் முருகன் ஆலயம், துறைநீலாவணைக் கண்ணகி அம்மன் ஆலயம் இவைதவிர்த்து ஏனைய இன்னோரன்ன பல ஆலயங்களில் ஆடி, கரகாட்டத்தின் பாதுகாவலனாகவும் அதற்கு உரியவராகவும் விளங்கியுள்ளார்.


இத்தகைய தமிழர்களுடைய அடையாளமான கரகாட்டம் இன்று மருவிவரும் சூழலில் அதனைத் தேர்ந்தெடுத்து கரகாட்டத்துறைக்கு உயிர்கொடுத்த இக்கலைஞர்பற்றி அறிந்தவர்கள் யார் உளர்?

கலைத்துறையில் தேர்ச்சிபெற்ற இவரது ஆற்றலைப் பாராட்டி துறைநீலாவணை முரசொலி நாடகமன்றம் கரகாட்டத் திலகம் என்றபட்டத்தையும் சீட்ஸ் அமைப் புகலைத் தென்றல் என்றபட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

அது மட்டுமன்றி கலாபூசணம், நாடகவிழாகௌரவம், கதிரவன்விருது, வித்தகர்விருது போன்ற பலவிருதுகளைப் பெற்றும் தன்கலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டாலும் இச்சோமசுந்தரத்தினைப்பற்றி அறிந்தவர்கள்யார் உளர்?


கிட்டத்தட்ட 57 வருடங்களாக தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கலைக்காக தன்னை அர்ப்பணித்து பலவிருதுகளையும் பெற்றுக்கொண்ட இக்கலைஞர் 2019ஆம் ஆண்டு பங்குனிமாதம் 28ஆம்திகதி இறைவனடிசேர்ந்தார்.

இதுவரைகாறும் இவர்செய்த அர்ப்பணிப்புப் பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல முற்பட்டபாரம்பரியக் கலையைப்பற்றியும் அறிந்தவர்கள்யார் உளர்?

இவரும் ஒருபிரபல்யமான எழுத்தாளராக, வைத்தியராக, அரசியல்வாதியாக இருந்திருந்தால் அனைவரும் அறிந்திருப்பர், தெரிந்திருப்பர்.

ஆனால் இவரோ ஒருபாரம்பரியக் கலையினை வளர்த்தெடுத்த கலைஞர். இதனால் என்னவோ இவருடைய பெருமை ஒரு குறுகியவட்டத்திற்குள் மட்டுமே பரவியிருக்கிறது.

அந்தவட்டத்தினுள் நானும் ஒருத்தியாக இருக்கின்ற பட்சத்திலேயேதான் அவரையும் அவர் வளர்த்த கலையையும்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.


ஆமாம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக கலையை வளர்ப்பதற்காக பாடுபட்ட மாலையர்கட்டு சோசுந்தரம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற கௌரவம் என்பது ஒப்பீட்டளவில் குறைவானது என்றே கூறவேண்டும்.

நாகரிக வளர்ச்சியின்பால் இத்தகைய பாரம்பரியக் கலைகளுக்கும், பாரம்பரியக் கலைஞர்களுக்கும் சமூகத்தில் கிடைக்கப்பெறுகின்ற மதிப்பும் மரியாதையும் குறைவானதே.

ஏனெனில் இவர்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் முகமாக இவர்சார்ந்த சமூகத்தினுள் கேட்கப்பட்ட வினாக்களுக்கு இவர்பிறந்தார், கோயில் விழாக்களில் ஆடினார், தற்பொழுது உயிரோடு இல்லை என்றவாறு பதில்கள் இருந்ததே தவிர்த்து இந்தப்பாரம்பரியக் கலையினை எவ்வாறுவளர்த்தார், எதற்காகவளர்த்தார், அவருடைய நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கான பதில்கள் யாரிடமும் இருக்கவில்லை. இதனடிப்படையில் இக்கலையின் தாற்பரியம் சமூகத்திற்கு விளங்கவில்லை என்றுதானே அர்த்தம்.

நாம் அனைவரும் முழுமை என்ற ஒன்றிற்குள் வாழ்கிறோம். அந்த முழுமையும் முழுமை அல்ல என்பதனை நவீன மார்க்சியவாதிகளில் ஒருவரான அதோர்னோ குறிப்பிடுகின்றார்.

ஏனெனில் நாம் முழுமை என்றநினைத்து ஏதோவொன்றை நம்பி தன்னுணர்வற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அம்சமாக இருந்தாலும் ஏன், எதற்கு, எவ்வாறு என்ற கேள்விகளைக் கேட்டு விமர்சிக்காது அவ்வாறே ஏற்றுக் கொண்டு நடக்கின்றோம். இதனால் யதார்த்தம் என்பது மாயக்கண்ணாடிபோட்டுமறைக்கப்படுகின்றது.

அதுபோலத்தான் இன்று பாரம்பரியக் கலைகளும் நவீன தொழில்நுட்பத்தின் வருகையினால் மறைக்கப்பட்டுப் போய்க்கிடக்கின்றது.


இந்நேரத்தில் ஒருசில கலைஞர்களால் பாரம்பரியக் கலைகள் வளர்க்கப்பட்டாலும் அதனை ரசிப்பதற்கும் மதிப்பதற்குமான ஆட்கள் குறைவாகவே கிடைக்கின்றனர்.

இதனால் என்னவோ சோமசுந்தரம் அவர்கள் பல ஆலய நிகழ்வுகளில் கரகாட்டம் ஆடியிருப்பினும் அந்தக்கலை ஏன் உருவானது, அவர்விட்டுச் சென்ற இக்கலையை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என்ற வினாவிற்கான விடை இன்றைய இளையதலை முறையினரின் கையில் இல்லாதிருப்பது சோமசுந்தரம் அவர்கள் கற்றகலைக்கும் பெற்ற விருதிற்கும் மதிப்பின்றி இவர்பற்றி அறிந்தவர்கள் யார்உளர்?, இவர்பற்றி அறிந்தவர்கள் யார் உளர்? என்றவினாவினைக் கேட்க தோன்றுகின்றது.


ஏனெனில் இவரால் இறக்கி வைக்கப்பட்ட கரகத்தினை இன்னொருவரின் தலையில் ஏற்றுவதற்கு இன்றைய சமூகத்தில் யாரும் தயாராக இல்லைஎன்பதே யாவரும் அறிந்த உண்மை. எனவேசோமசுந்தரம்அவர்கள்இறக்கிவைத்தகரகத்தினைஇந்தத்தலைமுறையினர்ஏற்றுகரகாட்டம்என்றபராம்பரியக்கலையினைவளர்த்தெடுக்கமுற்படுகின்றபட்சத்தில்மட்டுமேஇவரைப்பற்றிஉலகமேஅறியச்செய்யமுடியும். இல்லையெனில் சோமசுந்தரம்பற்றி அறிந்தவர்கள் யார்உளர்? என்ற வினாவிற்கான விடை காலகாலத்திற்கும் தொக்கியேநிற்கும் என்பது கண்கூடு.
தே.பேபிசாளினி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More