
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஸிமினிடம் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
சஹ்ரான் பெண்கள் சிலருக்கு பயங்கரவாத செயற்பாட்டில் இணைத்துக் கொள்வதற்காக பயிற்சி வழங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது #உயிர்த்தஞாயிறு #சஹ்ரானிடம் #பயிற்சி #பெண் #கைது
Add Comment