Home பிரதான செய்திகள்ஐபிஎல் போட்டி ஆரம்பத் திகதி அறிவிப்பு – ரசிகா்களுக்கு அனுமதி இல்லை

ஐபிஎல் போட்டி ஆரம்பத் திகதி அறிவிப்பு – ரசிகா்களுக்கு அனுமதி இல்லை

by admin

ஏப்ரல் 9-ம் திகதி 14-வது ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தநிலையில் முதலாவதாக சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் போட்டியிடவுள்ளன.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் மே 30ம் திகதி நிறைவடைகிறது.

எனினும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #ஐபிஎல்_போட்டி #ரசிகா்களுக்கு #அனுமதி #பிசிசிஐ #மும்பை #பெங்களூரு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More