Home இலங்கை‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

‘தவறி விழுந்தேன்’ – இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

by admin

சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் தவறி விழுந்ததாக சுன்னாகம் காவல்துறையினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். 


சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி  உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன் சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் , சுன்னாகம் காவல்துறையினா் வைத்திய சாலைக்கு சென்று இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்ற போது , தான் தவறி விழுந்தே காயங்களுக்கு உள்ளானேன் என வாக்கு மூலம் அளித்ததுடன் , தனக்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் காவல்துறையினாிடம் கூறியுள்ளார்.  #தவறி_விழுந்தேன் #இராணுவத்தினரின்_தாக்குதலுக்கு #இளைஞன் #வாக்குமூலம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More