Home இலங்கை பசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்

பசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்

by admin

பசறை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இன்று (20) காலை 6.55 மணியளவில் பசறை, லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருநது வீதியை விட்டு விலகி, சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

விபத்தில் பேருநது சாரதி உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர் எனவும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #பசறை #பேருந்து_விபத்து #காயம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More