Home இலங்கை சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்!

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்!

by admin

ஐ.நா மனித உரிமைகன் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் விடயம் 08 இன் கீழான வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் பற்றிய பொது விவாத்தில் இணையவழியில் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 19-03-2021 ஆற்றிய உரையின் விபரம் வருமாறு.

அவைத்தலைவர் அவர்களே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த விடயத்தை நான் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்டம் (ஏனுPயு) வெளிப்படுத்துகிறது.


சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ்த் தேசமானது தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக போராடிவருகிறது . சிறிலங்கா அரசானது வன்முறையை கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மை பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழி போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது.


2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச்சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 வீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத் தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்ட்டு , ஆகக் குறைந்தது இந்த அரசின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகுமென்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும்.


ஆனால் நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே. இந்த அரசானது, சர்வதேசத்த்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.


அந்த இராணுவ நடவடிக்கையினுடைய விளைவுகளே, சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டை தமிழர்கள் முன்வைக்கும் நிலையை உருவாக்கியது.
ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும், சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள் என்பதை இங்கு வெளிப்படுத்திக்கொள்கிறேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More