இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை எதிர்வரும் 06 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் முன்னிலையான போது அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலுடன் செல்லாத காரணத்தால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதத்தில் குறித்த முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கோப்குழு #இலங்கைகிரிக்கெட்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link