இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அதேவேளை, நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் வேண்டும் எனவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் அனைத்து மக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்த இந்தியா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழர்களின் பிரச்சினையை ஆதரிக்கும் அதேநேரம் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. #இலங்கை #தமிழ்_மக்களின் #இந்தியா