இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் தந்தையும் மகன்களும் பலி

கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பளை , இத்தாவில் பகுதியில் யாழ்ப்பாத்திலிருந்து பளை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனமும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பளை பிரதேசத்தைச் சோ்ந்த 38 வயதான தந்தையும் அவரது 14 மற்றும் 11 வயதுடைய மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #கிளிநொச்சி #பளை #விபத்து #தந்தை #மகன்கள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link