Home இலங்கைதிசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனை

திசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனை

by admin

இலங்கைக் கிாிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்டக்காரா் திசாரா பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்ட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற குரூப் போட்டியில்
20 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஐந்தாவது துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய இலங்கை ஆர்மி அணித்தலைவா் திசாரா பேரேரா பகுதி நேர பந்து வீச்சாளரான தில்ஹான் கூரே வீசிய ஆறு பந்துகளையும் சிக்சர் அடித்துள்ளாா்.


இதன் மூலம் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளதுடன் சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கார்பீல்ட் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் ஒயிட்லி, ஹஸ்ரத்துல்லா ஜஜாய், லியோ கார்ட்ர், பொல்லார்ட் ஆகியோர் ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் அடித்துள்ளனா் எ ன்பது குறிப்பிடத்தக்கது #இலங்கைக்கிாிக்கெட் #துடுப்பாட்டக்காரா் #திசாராபெரேரா #சிக்சர் #சாதனை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More