மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சம்பியன் பட்டத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனும், முதல்தர வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டி 9-ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்குடன் போட்டியிட்டு ஆஷ்லி 6-3 ,4-0 எனற் கணக்கில் முன்னிலையில் இந்ருந்த நிலையில் காயம் காரணமாக பியான்கா போட்டியிலிருந்து விலகினாாா்.
இதனையடுத்து ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.
35 ஆண்டு கால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற 6-வது வீராங்கனை என்ற பெருமையை ஆஷ்லி பார்ட்டி பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஸ்டெபி கிராப் (ஜெர்மனி), மோனிகா செலஸ் (அமெரிக்கா), சாஞ்சஸ் விகாரியா (ஸ்பெயின்), வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றவர்கள் ஆவர். #மியாமிஓபன்டென்னிஸ் #சம்பியன் #ஆஷ்லிபார்ட்டி