Home இலங்கையாழில் 12 பேருக்கு கொரோனா!

யாழில் 12 பேருக்கு கொரோனா!

by admin

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அதன் போது வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 6 பேருக்கும், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்மற்றையவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றும் ஒருவர், (அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்)

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியர் ஆகியோருக்கும் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. .

அதேவேளை வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More