Home இலங்கைஇலங்கை விமானப்படை வீரா் பாக்குநீரிணையை கடந்து புதிய சாதனை

இலங்கை விமானப்படை வீரா் பாக்குநீரிணையை கடந்து புதிய சாதனை

by admin


இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.


இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோஸான் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10)   சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில்   தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து  பயணத்தை ஆரம்பித்து  
பாக்கு நீரிணை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைந்தார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும்   இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைமன்னாரை சென்றடைந்தார். 
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் குறித்த தூரத்தை கடக்க 51 மணித்தியாலங்கள் எடுத்து சாதனை படைந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More