Home இலங்கைபிரபல ஆடை வர்த்தக நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன கைது:

பிரபல ஆடை வர்த்தக நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன கைது:

by admin
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்! இலங்கையின் பிரபல ஆடை வர்த்தக நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ (House of Fashions) உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன, சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் பெறுமதி மதிப்பீட்டுப் பிரிவு மேற்கொண்டு வரும் விசேட விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திடீர் நெஞ்சு வலி – வைத்தியசாலையில் அனுமதி:சுங்க அதிகாரிகளின் விசாரணைகளின் போது, பிரீத்தி ஜெயவர்தனவுக்குத் திடீரென நெஞ்சு வலி (இதயக் கோளாறு) ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு:
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தற்போது, ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ் உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன, சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளியாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More