112
கணக்காய்வு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகளை நாளை (22.04.21) விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பல சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் கட்சிகளுக்கு அறிவித்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உரிய முறையில் கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.
Spread the love