Home இலங்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் விசேட திருப்பலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் விசேட திருப்பலி

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


-மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக  பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More