Home இலங்கை ரிஷாட் இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்கின்றாா்

ரிஷாட் இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்கின்றாா்

by admin

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

கொவிட்19 அவசரகால நிலைமை தொடர்பான முழுநாள் விவாதம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களுக்கமைய, சபை அமர்வுகளில் ரிஷாட் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இன்று நடைபெறும் சபை அமர்வில் அவா் கலந்துகொள்ளகின்றாா்.

ரிஷாட் பதியூதீன் பயங்கரவாதத் தடைச் சடடத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை மரணதண்டனைக் கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக புதிய மகசின் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More