Home இலங்கைபயணத்தடை அமுலில் உள்ள போதும் அன்னதானம் – 25 பேருக்கு மேல் தனிமைப்படுத்தலில்

பயணத்தடை அமுலில் உள்ள போதும் அன்னதானம் – 25 பேருக்கு மேல் தனிமைப்படுத்தலில்

by admin

மல்லாகம் பகுதில் உள்ள  அம்மன் கோவில் ஒன்றில் இன்றைய தினம் அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் காவல்துறையினா் மற்றும் சுகாதாரப்பிரிவினர்  தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடாகியிருந்து.

தெல்லிப்பழை காவல்துறையினா் மற்றும் தெல்லிப்பழை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவிக்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, இன்று காலை பொதுச்சுகாதரப்பரிசோதகர் மற்றும் காவல்துறையினா் அங்குசென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியிருத்த நிலையில் , உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானோர் குடும்பத்துடன்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More