இலங்கை பிரதான செய்திகள்

பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தலில்

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,


கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பயண தடை அமுலில் உள்ள போது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 
அதனை உறுதிப்படுத்திக்கொள்ள நெல்லியடி காவல்துறையினருடன் சுகாதார பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்த போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். 

அந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின் , தொலைபேசியில் காணப்பட்ட கொண்டாட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.