இலங்கை பிரதான செய்திகள்

நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பம் யாழ்.நீதிமன்றால் நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.

சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது, சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் காவல்துறைப் பிரிவில் தடை செய்யக் கோரி காவல்துறையினரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இலங்கை குற்றவியல் சட்டம் 106ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் காவல்துறையினர் முன்வைத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய்காவல்துறையினரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.