ஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கொரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை முன்னெடுத்துள்ள பிாித்தானிய அரசு அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது ஜோன்சன் & ஜோன்சன் டுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடா்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
“நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் செய்தி இது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு டோஸ் (ஜோன்சன் & ஜோன்சன்) தடுப்பூசிகள் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சமீபநாட்களாகத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது