Home உலகம்ஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சனை வழங்க பிரித்தானியா அனுமதி

ஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சனை வழங்க பிரித்தானியா அனுமதி

by admin

ஒரே டோஸ் தடுப்பூசியான ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கொரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை முன்னெடுத்துள்ள பிாித்தானிய அரசு அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது ஜோன்சன் & ஜோன்சன் டுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்

“நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் செய்தி இது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு டோஸ் (ஜோன்சன் & ஜோன்சன்) தடுப்பூசிகள் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சமீபநாட்களாகத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More