இலங்கை

பனையிலிருந்து விழுந்த அருமைராசா உயிரிழப்பு!

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற குறித்த சம்பவத்தில் , ஐந்து பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய மாரிமுத்து அருமைராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பனை மரத்தில் ஏறிய வேளை மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். அதனை அவதானித்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து சங்கானை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பதாகவே அவர் உயிரிழந்துள்ளார். என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.