நாடளாவிய ரீதியில் பயண யாழில் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து தொலைக்காட்சி, துவிச்சக்கர வண்டி மற்றும் மின்சாதன பொருட்கள் ,விலை உயர்ந்த உணவு பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால் பக்கெட்டுகள் என சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதிக்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
அது குறித்துகடை உரிமையாளர்களினால் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்றைய தினம் 3 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. சந்தேகநபர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 20 தொடக்கம் 30 வயதினை உடையவர்கள் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.