Home இலங்கைமுல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம்!

முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம்!

by admin

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதானவரே கொரோனா தொற்று காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

எனினும் இவர் ஏற்கனவே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1,224 குடும்பங்களை சேர்ந்த 3,179 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 487 குடும்பங்களை சேர்ந்த 1156 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ள நிலையில் 737 குடும்பங்களை சேர்ந்த 2,023 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More