யாழில். பிறந்து ஒரு மாதத்திற்கு உள்ளிட்ட மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 12நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாளே ஆனா குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் , தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை இளவாலை பகுதியை சேர்ந்த 09 மாத குழந்தைக்கும் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத குழந்தைக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.